இன்றைய காலகட்டத்தில் காவல்துறையினருக்கு சிசிடிவி கேமராக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதாவது கண்ணுக்கு தெரியாத பல குற்றங்களுக்கு ஒரு சிசிடிவி கேமராக்கள் மூலம் அம்பலம் ஆகி விடுகிறது. அதாவது வீட்டில் நடக்கும் சில வன்முறை சம்பவங்கள் தொடர்பாக சிசிடிவி கேமராக்கள் காட்டிக்கொடுக்கிறது. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு வயதான முதியவர் வீல்சேரில் அமர்ந்துள்ளார்.

அவருடைய மருமகள் அந்த முதியவரை கைகளால் பலமாக தாக்குவதோடு செருப்பால் அடிக்கிறார். இதை பார்த்த வளர்ப்பு நாய் ஓடி வந்து அந்த பெண்ணை தடுக்க முயல்கிறது. இருப்பினும் அந்தப் பெண் மிருகத்தனமாக அந்த முதியவரை தாக்குகிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் நெட்டிசன்கள் பலரும் இந்த செயலுக்கு கண்டனங்களை தெரிவித்து வரும் அந்த பெண்ணின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.