நெல்லையிலிருந்து அயோத்திக்கு வருகின்ற ஜூன் 6ஆம் தேதி புண்ணிய தீர்த்த யாத்திரை சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளது. பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் எனப்படும் அந்த ரயிலில், நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், சென்னை வழியாக காசி, கயா, அயோத்திக்கு சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தனி நபர் ஒருவருக்கு 18 ஆயிரத்து 550 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.