
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த வீடியோக்கள் அதிக அளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிக்க தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் தாய்ப்பாசம் என்பது பொதுவானதாக இருக்கும்.
இதனை ஈடு செய்ய எந்த விஷயமும் உலகில் இல்லை என்பது மிகையானது. அந்த அளவிற்கு தாயின் பாசம் என்பது சுயநலமாற்றதாக இருக்கும். பறவையாக இருந்தாலும் மிருகமாக இருந்தாலும் அதுவும் மனிதர்களைப் போல பாசப்பிணைப்புடன் இருக்கும் பல வீடியோக்களை நாம் தினந்தோறும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதன்படி தனது குட்டி போத்தல், பால் குடிக்க கூடாது என்று தடுக்கும் நாய் தொடர்பான வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Mother Dog Mind Voice:-
தூய தாய்ப்பால் குடிப்பதை விட்டுவிட்டு அவன் கொடுக்கிற தண்ணி கலந்த புட்டி பாலுக்கு ஏன்டா அலையிற நாயே.. pic.twitter.com/AiDM85RGXx— 🐦𓃵வானம்பாடி𓃵🐦 (@Vanambadi_Twits) July 4, 2024