முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று திடீரென்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்குள்ள உணவுகளை ஆய்வு செய்து சாப்பிட்டு தரம் பார்த்தார். மேலும் அம்மா உணவகங்களுக்கு பல அதிரடியான உத்தரவுகளையும் பிறப்பித்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், அம்மா உணவகங்களின் தரத்தை உயர்த்தாமல் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆய்வு செய்வது போல நாடகமாடுகிறார். முதல்வர் ஆய்வுக்கு வருவார் என்று முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு அங்கு மட்டும்தான் தரமான உணவு தயாரிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.