தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூமாலை ராவுத்தர் தெருவில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்தியசீலன் என்ற மகன் உள்ளார். இவர் டெலிவரி செய்யும் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக சத்தியசீலனும் 17 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சத்தியசீலன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும் அதனை வீடியோ எடுத்து சிறுமியிடம் காட்டி அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்தார். ஒரு கட்டத்தில் சிறுமி தனக்கு நடந்த கொடுமையை பெற்றோரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தஞ்சை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சத்தியசீலனை கைது செய்தனர்.