
சென்னை மாவட்டத்தில் உள்ள முகலிவாக்கம் பகுதியில் வட மாநில தொழிலாளர்கள் வாடகைக்கு வீடியோ எடுத்து தங்கி உள்ளனர். அந்த வீட்டின் மேல் தளத்தில் வட மாநில பெண்ணின் இரண்டு வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் வீட்டின் கீழ் தளத்தில் வசித்த வாலிபர் ஒருவர் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் கழுத்தை நெரித்து தண்ணீரில் முக்கி கொலை செய்ய முயன்றதாக தெரிகிறது. சத்தம் கேட்டு ஓடி வந்த குழந்தையின் உறவினர்கள் வட மாநில வாலிபரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.
இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி போலீசார் வந்து விசாரணை நடத்திய போது தனது வாயை பொத்தி இழுத்துச் சென்று அந்த வாலிபர் கழுத்தை நெரித்து தண்ணீரில் முக்கியதாக குழந்தை சைகை மூலமாக காண்பித்தது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் கொல்கத்தாவை சேர்ந்த உமர் என்பது தெரியவந்தது. அவர் போதையில் இருந்ததால் விசாரணையில் தாமதம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.