
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவர் மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பெருமாளை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பெருமாள் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்தனர். அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெருமாள் ஜாமீனில் வெளியே வந்து சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்தது.