
அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் மாநிலத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன் 911 என்ற தொலைபேசி எண் மூலம் போலீசாரை தொடர்பு கொண்டு பேசினார். அந்த சிறுவன் என் அம்மா மோசமானவர். என் அம்மாவை கைது செய்ய வேண்டும். எனது ஐஸ்கிரீமை அம்மா சாப்பிட்டு விட்டார். என் அம்மாவை கைது செய்து சிறையில் அடையுங்கள் என கூறியுள்ளார். உடனே அந்த சிறுவனின் அம்மா தொலைபேசியை பிடித்துக் கொண்டு எனது மகன் நான்கு வயது குழந்தை. நாங்கள் அவரை தடுத்து நிறுத்த முயன்றோம். ஆனால் நாங்கள் கூறியதை கேட்காமல் தொலைபேசி மூலம் உங்களை அழைத்து விட்டார்.
நான் எனது மகனின் ஐஸ்கிரீமை சாப்பிட்டு விட்டேன். அதனால்தான் அவர் உங்களை அழைத்தார் என விளக்கம் கொடுத்துள்ளார். அந்த சிறுவன் தனது தாயை கைது செய்ய வேண்டும் என விடாப்பிடியாக பேசியதால் போலீசார் சிறுவனின் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது சிறுவன் தனது மனநிலையை மாற்றி அம்மாவை சிறையில் அடைக்க வேண்டாம் எனக் கூறியுள்ளான். இதனையடுத்து சிறுவன் விரும்பி கேட்டதால் போலீசார் அவனுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்துள்ளனர். பின்னர் மகிழ்ச்சியாக இருந்த சிறுவனுடன் போட்டோ எடுத்துள்ளனர் . அந்த போட்டோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.