பிரபல பின்னணி பாடகியான கல்பனா என் ராசாவின் மனசிலே என்ற படத்தின் மூலமாக பாடகியாக அறிமுகமானார். இவருடைய அப்பா டிஎஸ் ராகவேந்திரா பிரபல நடிகர். கல்பனாவும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் .44 வயதாகும் இவர் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த நிலையில் இவருக்கு சுய நினைவு திரும்பி விட்டதாக கூறப்படுகிறது. நுரையீரலில் தண்ணீர் புகுந்ததால் வென்டிலேட்டர் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவர்கள் கூறியள்ளார்கள். இந்த நிலையில் கல்பனாவின் மகள் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில், “தன்னுடைய அம்மா தற்கொலை முயற்சி எல்லாம் செய்யவில்லை. அவர் தினமும் எடுக்கும் மாத்திரையில் கொஞ்சம் ஓவர் டோஸ் ஆகிவிட்டது. மற்றபடி எங்களுடைய குடும்பத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. தவறான செய்திகளை பரப்பாதீர்கள்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.