
வனமகன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த தமிழில் அறிமுகமானவர்தான் சாயிஷா. அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த், காப்பான், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, ஹிந்தி, கன்னட மொழிகளிலும் நடித்துள்ளார். கஜினிகாந்த் படத்தில் நடித்த போதுதான் ஆயிஷாவுக்கும், ஆர்யாவுக்கும் காதல் மலர்ந்தது. தற்போது இருவரும் பெற்றோர்சம்மதத்தோடு திருமணம் செய்துள்ளார்கள்.
View this post on Instagram
இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் உள்ளது. குழந்தை பெற்றதற்கு பிறகும் மீண்டும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் சாயிஷா. இதற்கான கதைகளையும் ஆர்வமாக தேர்ந்தெடுத்து வருகிறார். மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருந்துவரும் இவர் வீடியோ, புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஒரு பாடலுக்கு நடனமாடும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் அதிவேகமாக வைரலாகி வருகிறது.