
தாய்லாந்தில் நடைபெற்ற அதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூரியன் புப்பா-ஆர்ட் என்ற பேஸ்புக் பயனரின் மனைவி சாங், சில வாரங்களுக்கு முன்னர் மீன் சூப்பை சாப்பிட்டபோது, ஒரு கூர்மையான எலும்பு தவறுதலாக தொண்டையில் சிக்கியதுடன் கடுமையான வலியை ஏற்படுத்தியது.
தொடக்கத்தில், ரொட்டி மற்றும் அரிசி சாப்பிடுவது போன்ற வீட்டுவைத்தியங்களை முயற்சித்தாலும் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. முதலாவது மருத்துவமனைக்குச் சென்ற போது எக்ஸ்ரே எடுக்கப்பட்ட பின்பு எந்த பொருளும் தெரியவில்லை.
இரண்டாவது மருத்துவமனையிலும் தெளிவான அறிகுறிகள் இல்லாத நிலையில் வலி நிவாரண மாத்திரைகள் வழங்கப்பட்டன. ஆனால் வலி தொடர்ந்து எடுத்தது. இந்நிலையில், ஜூன் 17-ஆம் தேதி, கழுத்தில் தைலம் தடவியபோது தோலில் வலியுடன் கூடிய ஒரு கூரிய பொருள் வெளியே வர துவங்கியது.
அதன் மேல் அழுத்தம் கொடுத்தவுடன், இரண்டு சென்டிமீட்டர் நீளமுடைய மீன் எலும்பு வெளியே வந்தது. இந்த தருணத்தை அவரது கணவர் சூரியன் படம்பிடித்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். மூன்றாவது முறையாக மருத்துவமனைக்குச் சென்றபோது, மருத்துவர்கள் அந்த மீன் எலும்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். “இதுபோன்ற சம்பவத்தை இதுவரை காணவில்லை” என்று மருத்துவர்கள் ஆச்சர்யத்துடன் தெரிவித்தனர்.
சூரியன் தனது பதிவில், “மீன் சாப்பிடும் போது மக்கள் கவனமாக இருக்க வேண்டும். சிறிய தவறுகள் பெரிய பிரச்னையாக முடியும்” என்று எச்சரித்துள்ளார்.