
ஒரு பெண்ணின் காதுக்குள் பாம்பு நுழைந்த அதிர்ச்சிகரமான வீடியோ சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. வீடியோ எப்போது எங்கு பதிவுசெய்யப்பட்டது என்பதற்கான தெளிவான தகவல்கள் இல்லை.
ஆனால், அந்தக் காணொளி பலரை வாயடைக்க வைத்துள்ளது. “@therealtarzann” என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் இந்த வீடியோவை பகிர்ந்தது. இதனை 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்து, பலர் அதிர்ச்சி மற்றும் பயம் கலந்த கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram
அந்த வீடியோவில், காதுக்குள் பாம்பு நுழைந்த பெண்ணின் முகத்தில் பயமும், வலியும் தெளிவாக தெரிகின்றன. ஒரு ஆண் அந்த பாம்பை மிகவும் நிதானமாக வெளியே இழுக்க முயற்சிக்கிறார். பாம்பு காயமடையக்கூடாது என்பதையும் கவனித்துக் கொண்டு, சிறிய கருவியுடன் வெளியே இழுக்கிறார்.
ஆனால், அந்த முயற்சியில் சிரமம் ஏற்படுகிறது. பாம்பு நகரும் போதிலும், பெண்ணின் வலி மிக அதிகமாக காணப்படுகிறது. இந்த வீடியோ உண்மையா அல்லது ஏதேனும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ உறுதியும் இல்லை. இந்த வீடியோவின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பலரும் “ஒரு பாம்பு காதுக்குள் எப்படி நுழைந்தது?” என்பதே மிகப்பெரிய மர்மமாக உள்ளது. சிலர் இதுபோன்ற கொடூரமான காட்சியை இதற்கு முன் பார்த்ததே இல்லையெனக் கருத்து தெரிவித்துள்ளனர்.