உள்துறை மந்திரி அமித்ஷா என்ற நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து பேசியது சர்ச்சையாக மாறிய நிலையில் எதிர்க்கட்சிகள் அவர் பதவி விலக வேண்டும் எனவும் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறது. அதாவது இன்று அம்பேத்கரை பற்றி பேசுவது பேஷன் ஆகிவிட்டது எனவும் அம்பேத்கர் பெயரை சொல்வதற்கு பதிலாக கடவுள் பெயரை சொன்னால் அடுத்த 7 ஜென்மத்திற்கு சொர்க்கத்திற்கு போகலாம் என்றும் அவர் கூறினார். இது சர்ச்சையாக மாறிய நிலையில் எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறது. ஆனால் அமித்ஷா தான் அப்படி பேசவில்லை எனவும் தன்னுடைய பேச்சை காங்கிரஸ் கட்சியினர் திரித்து கூறுவதாகவும் தேர்தல் சமயத்தில் ஏஐ மூலமாக என்னுடைய பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்ட நிலையில் தற்போதும் அதே போன்று செய்கிறது எனவும் பாஜக எப்போதுமே அம்பேத்கரை மதிக்கக்கூடிய ஒரு கட்சி எனவும் கூறினார்.

இந்த நிலையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் அம்பேத்கர் பற்றி பேசியுள்ளார். அவர் பேசியதாவது, அம்பேத்கரை நாங்கள் முருகப்பெருமானுக்கு நிகராக பார்க்கிறோம். அம்பேத்கரை எதிர்க்கட்சிகள் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவதாக அமித்ஷா கூறிய நிலையில் ஒரு சிலர் தேவையற்ற விவாதத்திற்கு ஆளாக்குகிறார்கள். கடந்த 1952 ஆம் ஆண்டு அம்பேத்கரை தேர்தலில் தோற்கடித்து  காங்கிரஸ் கட்சி தான் அவரை சிறுமைப்படுத்தியது. அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட தாமதமாவதற்கு காங்கிரஸ் கட்சி தான் காரணம் என்றும் கூறினார். மேலும் முருக பெருமானுக்கு நிகராக நாங்கள் அம்பேத்கரை பார்ப்பதாகவும் கூறினார்.