
மாண்புமிகு அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்களின் அருமைத் தந்தை திரு. முத்தூர். சா. பெருமாள்சாமி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வருந்தினேன். தந்தையை இழந்து தவிக்கும் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என மாண்புமிகு முதலமைச்சர் திரு. முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சரும் கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான திரு. மு.பெ.சாமிநாதன் அவர்களின் அருமைத் தந்தை திரு. முத்தூர். சா. பெருமாள் சாமி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வருந்தினேன்.
தந்தையை இழந்து தவிக்கும் திரு மு.பெ.சாமிநாதன் அவர்களைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன். அப்போது, 94 ஆண்டுகளைக் கடந்து நிறை வாழ்வு வாழ்ந்த தன் தந்தை, அவரது இறுதி மூச்சு வரை உழவராக வாழ்ந்ததை குறிப்பிட்டார் திரு பெருமாள் சாமி அவர்களது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் மீண்டும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு அமைச்சர் திரு. @mp_saminathan அவர்களின் அருமைத் தந்தை திரு. முத்தூர். சா. பெருமாள்சாமி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வருந்தினேன்.
தந்தையை இழந்து தவிக்கும் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்… pic.twitter.com/6k3a46006g
— CMOTamilNadu (@CMOTamilnadu) February 23, 2024