
திருச்செந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் தெய்வானை என்ற யானை வளர்க்கப்படுகிறது. இந்த யானை சமீபத்தில் பாகம் உட்பட இருவரை மிதித்து கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் செல்பி எடுத்த போது யானையை கோபப்படுத்தியதால் அப்படி நடந்து கொண்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் பொன்முடியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் திருச்செந்தூர் யானை அசாமில் இருந்து கொண்டுவரப்பட்டது. அந்த யானையை வனத்துறையினரிடம் அனுமதி பெறாமல் அறநிலையத்துறை கோவிலில் வளர்த்தனர்.
அனுமதி பெறவில்லை என்றாலும் அதனை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அறநிலையத்துறைக்கு இருக்கும் நிலையில் அதனை அவர்கள் சரிவர செய்யவில்லை. அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தின் சரியான பராமரிப்பு இல்லாத தான் இது போன்ற சம்பவத்திற்கு காரணமாக அமைந்துள்ளது என்றார். அதோடு சில கோவில்களில் மட்டும் யானையை அனுமதி இல்லாமல் வளர்க்கிறார்கள் எனவும் அது தொடர்பாக அறநிலையத்துறைனரிடம் அறிவுறுத்தி அனுமதி பெறுமாறு கூறியுள்ளதாக தெரிவித்தார். மேலும் அறநிலையத்துறை சரியாக செயல்படாததால்தான் இதுபோன்ற நிகழ்வு நடந்துள்ளதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளதால் அமைச்சர் சேகர்பாபுவை அவர் விமர்சனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பான வீடியோ கூட தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
அறநிலையத்துறை சரியாக செயல்படாமல் முறையான பராமரிப்பு இல்லாததால் இது போன்ற நிகழ்வு அரங்கேறியுள்ளது
அமைச்சர் சேகர் பாபுவிற்கு எதிராக அமைச்சர் பொன்முடி அவேசம்🤭#DMKFailsTN pic.twitter.com/KQf4o0ffEf
— Bagavath Pratheep (@Bagavathprathee) November 21, 2024