
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது..
முந்தைய அதிமுக ஆட்சியின் போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ 1.62 கோடி ஏமாற்றியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தற்போது மின்சாரத்துறை அமைச்சராக இருந்த அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்..சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, தற்போது நீதிமன்ற காவலில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்..
இந்நிலையில் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டதாக செந்தில் பாலாஜி மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை 2 நீதிபதிகள் அடங்கி அமர்வு இன்று விசாரிக்கிறது. குறிப்பாக நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று சரியாக 10:30 மணி அளவில் தீர்ப்பு வழங்க உள்ளது..
முன்னதாக அமலாக்கத் துறையின் விளக்கங்களையும், செந்தில் பாலாஜி தரப்பு விளக்கங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பு தேதியை ஒத்தி வைத்தனர்.. இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது..குறிப்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்த நிலையில், சிகிச்சைக்கு பெற்று வரக்கூடிய இந்த சூழ்நிலையில் இந்த தீர்ப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.