இந்தியாவை சேர்ந்த நித்யானந்தா கடந்த 2019 ஆம் ஆண்டு நாட்டை விட்டு தப்பி ஓடினார். அதாவது ஒரு வெளிநாட்டு பெண் அவர் மீது பாலியல் புகார் தொடர்பான குற்றச்சாட்டை சுமத்திய நிலையில் நாட்டை விட்டு தப்பி ஓடி தற்போது கைலாசா என்ற ஒரு தனி நாட்டை உருவாக்கியுள்ளார். இவர் மீது ஏராளமான பாலியல் புகார் இருக்கும் நிலையில் இந்தியாவால் தேடப்படும் ஒரு முக்கிய குற்றவாளியாக நித்யானந்தா இருக்கிறார்.

இந்நிலையில் நித்தியானந்தா மீது தற்போது உலக அளவில் மிகப்பெரிய மோசடி குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது. அதாவது பொலிவியா நாட்டைச் சேர்ந்த அமேசான் காடுகளில் வசிக்கும் 3 பழங்குடியின மக்களிடம் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு நில ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியுள்ளார். அந்த நிலம் அமெரிக்க நாட்டைப் போன்று பெரிதாக இருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோன்று டெல்லியை விட 2.5 மடங்கு, மும்பைக்கு 6.5 மடங்கு, பெங்களூருவுக்கு 5.3 மடங்கு, கொல்கத்தாவை விட 19 மடங்கு பெரியதாக இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த நில ஒப்பந்தத்திற்கு வருடத்திற்கு இந்திய மதிப்பில் 8.96 லட்சம் ரூபாய் கொடுப்பதாக நித்தியானந்தா வாக்கு கொடுத்து கையெழுத்து வாங்கியுள்ளார். அந்த ஒப்பந்தத்தின் படி அந்த நிலத்தில் உள்ள இயற்கை வளங்கள் அனைத்தும் கைலாசா நாட்டிற்க்கே சொந்தமானது என நித்தியானந்தா கூறியுள்ள நிலையில் இந்த மோசடி ஒபொலிவியா நாட்டிற்கு தெரியவந்தது.

உடனடியாக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு அந்த ஒப்பந்தம் சட்டப்படி செல்லாது என்று அறிவித்ததோடு அமேசான் காடுகளில் உள்ள நிலங்களை வெளிநாட்டவர் எந்த விதத்திலும் வாங்க முடியாது எனவும் இது ஒரு கற்பனை ஒப்பந்தம் எனவும் பழங்குடியின அமைப்பினர் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் அரசு எச்சரித்துள்ளது. மேலும் இந்த மோசடி தற்போது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.