
இஸ்ரேல் ஹமாஸ் இடையே தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டின் பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து பேசியதோடு அவர்களுடன் அமெரிக்கா துணை நிற்கும் என்று உறுதியளித்தார். பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தபோது இஸ்ரேல் பிரதமர் கூறுகையில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை விட மிகவும் மோசமானது.
கடந்த 7ஆம் தேதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் 1400 பேர் உயிரிழந்துள்ளனர். குழந்தைகளை கூட ஹமாஸ் அமைப்பினர் கொடூரமாக கொலை செய்துள்ளனர். இத்தகைய கடினமான சூழலில் இஸ்ரேலுக்கு வருகை தந்து ஆதரவை தெரிவித்ததோடு மக்களுக்கு துணை நிற்போம் என அதிபர் ஜோ பைடன் உறுதி அளித்ததற்கு நன்றி எனக் கூறியுள்ளார்.