பிரிக்ஸ் அமைப்பினர் 11 நாடுகளை உள்ளடக்கியது. இந்த நிலையில்  அமெரிக்காவுக்கு எதிராக சில கொள்கைகளை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் பிரிக்ஸ் அமைப்பினரின் கொள்கைகளை ஏற்றுக் கொள்பவர்களுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என அமெரிக்க நாட்டின் அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் பிரேசில் அதிபர் கூறியதாவது, அமெரிக்காவின் மிரட்டலுக்கு யாரும் பயப்படத் தேவையில்லை. இந்த உலகம் முன்பு இருந்தது போல் இல்லை நிறையவே மாறிவிட்டது.‌ எனவே லுலா டிசில்வா என்ற பேரரசர் இந்த உலகிற்கு தேவையில்லை. பிரிக்ஸ் அமைப்பினர் எந்த ஒரு நாட்டுக்கும் எதிரானது அல்ல.

எனவே அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கு யாரும் பயப்பட வேண்டாம் கூறினார். இதனைத் தொடர்ந்து வர்த்தகம் செய்வதற்கு அமெரிக்க நாட்டின் டாலரை மட்டுமே சார்ந்து இருக்காமல் வேறு வழிகளிலும் வர்த்தகம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதற்கு முன்பு சீன நாட்டினரும் ட்ரம்பின் அறிவிப்பை கண்டித்தனர்.

மேலும் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் செய்தி தொடர்பாளர் கரோலின் பேசிய போது, பிரிக்ஸ் அமைப்பினர் அமெரிக்காவின் நலன்களுக்கு எதிரானது என நம்பும் ட்ரம்ப் பிரிக்ஸ் அமைப்பின் நகர்வுகளை ட்ரம்ப் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பதாக கூறினார்.