1949 ஆம் வருடம் சீனாவிடம் இருந்து தைவான் தனி நாடாக பிரிந்தது. அதன் பிறகு தைவானை  தங்கள் நாட்டுடன் இணைக்க சீனா தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அது நடக்கவில்லை. இதனால் சீனா தைவானுடன் எந்த நாடுகளும் அதிகாரப்பூர்வ உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் ஆரம்பம் முதல் தற்போது வரை அமெரிக்கா மட்டும் தைவானுக்கு ஆதரவாக இருந்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்கா நேற்று முன்தினம் 2000 கோடி மதிப்பிலான ராணுவ உதவிகளை தைவானுக்கு செய்துள்ளது. இதனை விமர்சித்த சீனா அமெரிக்கா தைவானை வெடி மருந்து கிடங்காக மாற்றி விட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்கா செய்யும் இந்த உதவிகள் தைவானை தங்கள் நாட்டுடன் இணைக்கும்  விருப்பத்தை எந்த விதத்திலும் மாற்றி விடாது என சீன அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.