
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் அமரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இது ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் உண்மை கதாபாத்திரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை முதல்வர் ஸ்டாலின் உட்பட அரசியல் பிரபலங்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையும் அமரன் திரைப்படத்தை பாராட்டி x பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், சீருடைகள் இருக்கும் வீரர்கள் காட்டும் வீரம், தைரியம், நேர்மை போற்றத்தக்கது. முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை யுகங்களுக்கு உத்வேகம் தரும் கதை. கடந்த 2014 ஆம் ஆண்டு காக்கியிலிருந்து போது உணர்ச்சிகரமான அனுபவங்களை உணர்ந்தேன். இத்தகைய திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் மற்றும் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்து சிவகார்த்திகேயனும் ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார்.