தமிழக சட்டப்பேரவையில் 12 மணி நேர வேலை மசோதா சட்டம் நேற்று நிறைவேற்றப்பட்ட  நிலையில் அதற்கு பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். இதற்கு எதிர்கட்சிகள் மட்டும் என்று திமுக கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால் இதற்கு தமிழக அரசு சாதகமான சில விளக்கங்களை கொடுத்துள்ளது.

இதையடுத்து 12 மணிநேர வேலை சட்ட மசோதா தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் அரசு ஆலோசனை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் 12 மணி நேர கட்டாய வேலை திருத்தச் சட்டத்தை திமுக அரசு நிறைவேற்றியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் EPS கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மத்திய சட்டத்தை எதிர்த்து வக்கணை பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது கொத்தடிமையாக மாறி ஒருதலைபட்சமாக தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் சட்ட திருத்தத்தை நிறைவேற்றியுள்ளார்’ என குறிப்பிட்டுள்ளார்.