
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலியில் கடந்த 21-ஆம் தேதி மாடியில் இருந்து பெண் குழந்தை தவறி கீழே விழுந்து உயிரிழந்தது. அந்த குழந்தையின் தந்தை முர்ஷித் குழந்தை இறந்து ஐந்து நாட்கள் கழித்து சிசிடிவி காட்சிகளை பார்த்துள்ளார். அப்போது ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது மனைவி அனம் பெற்ற பிள்ளை என பாராது இரண்டரை வயது மகளை கீழே தூக்கி போட்டது தெரியவந்தது. இதுகுறித்து முர்ஷித் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தையின் தாய்க்கும் மற்றொரு ஆணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த உறவுக்கு குழந்தை இடையூறாக இருந்தது. அடிக்கடி செல்போனில் பேசிய தனது மனைவியை முர்ஷித் கண்டித்துள்ளார். மேலும் இரண்டரை வயது குழந்தையும் தனது தந்தையிடம் வீட்டிற்கு வரும் நபர்கள் குறித்து கூறியுள்ளார். இதனால் இளம்பெண் தான் பெற்ற மகளையே மாடியில் இருந்து கீழே வீசி படுகொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.