
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நெல்சன் இயக்கத்தில் கடந்த வருடம் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில் அந்த படம் 600 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான ஜெய்லர் படத்தில் வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் தமன்னா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள்.
இந்த படத்தில் இடம்பெற்ற காவலா பாடல் மிகப் பிரபலம். சமீபத்தில் துபாயில் நடைபெற்ற ஃபிலிம் ஃபேர் விருதில் ஜெயிலர் திரைப்படம் 5 விருதுகளை தட்டி தூக்கியது. இதைத்தொடர்ந்து தற்போது இந்திய திரைப்படத்துக்கான ஐபா விருதிலும் ஜெய்லர் திரைப்படம் சிறந்த திரைப்படத்துக்கான விருதை வென்றுள்ளது.
அதன்பிறகு சிறந்த நடிகர் மற்றும் நடிகைகளுக்கான விருதுகளை பொன்னியின் செல்வன் படத்திற்காக நடிகர் விக்ரம் மற்றும் உலக அழகி ஐஸ்வர்யா ராய் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இதனையடுத்து சிறந்த இயக்குனருக்கான விருதை இயக்குனர் மணிரத்தினம் பெற்றுக் கொண்டார். மேலும் மார்க் ஆண்டனி படத்திற்காக சிறந்த வில்லன் நடிகர் விருதை எஸ்ஜே சூர்யா பெற்றுக்கொண்டார்.