
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் பிரசாந்த். இவர் வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பல படங்களில் அவர் வெற்றியை கண்டுள்ளார். ஒரு கட்டத்தில் நடிகர் பிரசாந்துக்கு பட வாய்ப்பு குறையவே அவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இந்நிலையில் தற்போது விஜய் உடன் சேர்ந்து தி கோட் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அதன்பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அந்தகன் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை பிரசாந்தின் தந்தை மற்றும் பிரபல இயக்குனரான தியாகராஜன் இயக்கியுள்ளார். அதோடு சந்தோஷ நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் அந்தகன் படத்தில் இடம்பெற்றுள்ள தீம் என்ற பாடலை வருகிற 24-ஆம் தேதி விஜய் வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.