தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் நிலையில் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படம் 38 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாக இருக்கிறது. இந்த படம் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் நிலையில் தற்போது படத்தின் டிரைலர் அப்டேட் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் அதன்படி இந்த படத்தின் டிரைலர் வீடியோ வருகிற 12-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும் இதனை போஸ்டர் வெளியீட்டு பட குழு அறிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.