
இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் விலங்குகள் பறவைகளுடைய வீடியோக்களும் வெளியாகிறது. பொதுவாக நாம் தினமும் காலை எழுந்தது முதல் இரவு படுக்க செல்லும் வரையும் சமூக வலைதளத்தில் ஆக்டிவ் ஆகவே இருக்கிறோம். அந்த சமயத்தில் நாம் பார்க்கும் ஒவ்வொரு வீடியோக்களும் விதவிதமாக இருக்கிறது.
அதன்படி மைதானத்தில் சிறுவர்கள் மியூசிக் போட்டு நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கே வந்த வெள்ளை நிற பறவை ஒன்று தாளத்திற்கு ஏற்றார் போல் நடனம் ஆடுகிறது. இந்த காட்சி பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கிறது. மேலும் குழந்தைகளோடு குழந்தையாக மாறிய பறவையின் இந்த வீடியோ இணைவாசிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
Dance like nobody’s watching.. 😂 pic.twitter.com/ielixnSfyf
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) June 5, 2024