தொழிலதிபர்கள் பலரும் தங்களுடைய கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் காரணமாக முன்னுக்கு வந்தவர்கள் அப்படி ஒருவர்தான் Danube குழுமத்தின் நிறுவனத்தில் தலைவருமான ரிஸ்வான் சாஜன் .இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து செயல்படும் ஒரு வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபர். இவர் வெறும் விற்பனையாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கினார். தற்போது துபாயில் பணக்கார இந்தியர்களில் ஒருவராக இருக்கிறார். இவருடைய Danube குழுமம் தற்போது பில்லியன் டாலர் குழுமமாக வளர்ந்ததோடு கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் பெரும் நிறுவனங்களில் ஒன்றாகவும் உள்ளது.

இவர் மும்பை நகரில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். தொடக்கத்தில் தெருவோரங்களில் புத்தகங்கள், பட்டாசு என விற்பனை செய்துள்ளார் . ஒரு கட்டத்தில் வீடுதோறும்  பால் விற்பனையும் செய்து வந்துள்ளார். 16 வயதில் தந்தையை இழந்த இவர் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பின் காரணமாக தன்னுடைய உறவினரின் உதவியை நாடி உள்ளார். அவருடைய கட்டுமான விற்பனை பொருட்கள் கடையில் சேர்ந்து வேலை பார்த்துள்ளார் வியாபாரம் உத்திகளை கற்றுக் கொண்ட சாஜன் அடுத்த கட்டத்திற்கு தம்மை பயன்படுத்தி தயார் செய்து கொண்டு இந்த குழும நிறுவனத்தை தொடங்கியுள்ளார். தற்போது இவருடைய சொத்து மதிப்பு 20,280 கோடி.