
நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரை மீதான விவாதத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் வழங்கி வருகிறார். அப்போது 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளதாக பிரதமர் மோடி கூறிய நிலையில் 4 கோடி மக்களுக்கு வீடு கட்டி கொடுத்துள்ளதாகவும், 12 கோடி கழிவறைகள் கட்டிக் கொடுத்துள்ளதாகவும் கூறினார். அதன் பிறகு கடந்த காலங்களில் பல லட்ச ரூபாய் ஊழல் செய்யப்பட்டுள்ளது என்று தலைப்பு செய்திகள் வந்த நிலையில் கடந்த 10 வருடங்களாக பல லட்ச ரூபாய் ஊழல் என்ற தலைப்பு செய்திகளே வரவில்லை. நாங்கள் பெட்ரோல் டீசல் இறக்குமதி மூலம் ஒரு லட்சம் கோடியை சேமித்துள்ளோம்.
நாங்கள் சேமிக்கும் பணத்தை வைத்து கண்ணாடி மாளிகை கட்டாமல் நாட்டை கட்டமைத்து வருகிறோம் என்றார். அதன்பிறகு பாஜக ஆட்சிக்கு வரும்போது எல்இடி பல்பின் விலை 400 ரூபாயாக இருந்தது. ஆனால் தற்போது ஒரு எல்இடி பல்பின் விலை வெறும் ரூ. 40 தான். இதன் மூலம் மக்களுக்காக 20 ஆயிரம் கோடியை மிச்சப்படுத்தி கொடுத்துள்ளோம். நாங்கள் நல்லது செய்வதால் தான் மீண்டும் மீண்டும் வெல்கிறோம். மேலும் சிலர் பாக்கெட்டில் அரசியலமைப்பு சட்டத்தை வைத்துக்கொண்டு அதற்கு அர்த்தம் தெரியாமல் உணர்கிறார்கள் என்று கூறினார்.