
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் விஜய். இவர் தற்போது தளபதி 169 திரைப்படத்தில் எச் வினோத் இயக்கத்தில் நடித்தவரும் நிலையில் இது அவருடைய கடைசி திரைப்படம். இந்த படத்திற்கு ஜனநாயகன் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் இந்த படத்தோடு சினிமாவிலிருந்து விலகி முழுமையாக அரசியலில் ஈடுபட போகிறார். தமிழக வெற்றி கழகம் என்று அரசியல் கட்சியினை விஜய் தொடங்கியுள்ள நிலையில் அடுத்து வரும் 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் விஜய் தமிழ்நாட்டில் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சியை கொண்டு வருவேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில் இன்று தளபதி 69 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. நடிகர் விஜயின் இந்த படத்திற்கு ஜனநாயகன் என்ற பெயர் வைக்கப்பட்ட நிலையில் அடுத்ததாக வெளியிட்ட போஸ்டரில் சாட்டையை சுழற்றியை நான் ஆணையிட்டால் என்ற வாசகம் இடம்பெற்று இருந்தது. எம்ஜிஆர் போன்று நான் ஆணையிட்டால் என்றும் விஜய் சாட்டையை சுழற்றி போஸ்டர் வெளியிட்டுள்ளது.
தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது. அன்று எம்ஜிஆர் சாட்டையை தூக்கி நிலையில் சமீபத்தில் அண்ணாமலை சாட்டையை தூக்கினார். அதாவது சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக அரசுக்கு எதிராக சாட்டையை சுழற்றினார் அண்ணாமலை. இன்று விஜய் சாட்டையை சுழற்றியுள்ளார். தமிழக அரசியலில் தற்போது சாட்டை ஆயுதமாக உள்ளதாக பேசப்படுகிறது. மேலும் அன்று எம்ஜிஆர் சாட்டையை தூக்கிய நிலையில் தற்போது விஜய் அண்ணாமலை ஆகியோரும் சாட்டையை கையில் எடுத்துள்ளனர். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.