பாமக கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணியிடையே மோதல் போக்கு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் ராமதாஸ் தன்னுடைய மகள் காந்திமதியை அழைத்து வந்திருந்தது தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது. முதன் முதலாக காந்திமதி அரசியல் மேடையில் தோன்றிய நிலையில் அன்புமணிக்கு பதிலாக அவரது மகளை ராமதாஸ் களமிறக்குகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதே நேரத்தில் சௌமியா அன்புமணியை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று ராமதாஸ் கூறிய நிலையில் தன்னுடைய வீட்டு பெண்கள் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை என்றார். அப்படி இருக்கும்போது மகளை மட்டும் அரசியல் மேடையில் ஏற்றியது எதற்காக என்று அன்புமணியின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

தன்னுடைய மகள் வழி பேரனான முகுந்தனை பாமக இளைஞரணி செயலாளராக நியமித்ததில் இருந்து தான் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் போக்கு ஏற்பட்ட நிலையில் தற்போது தன்னுடைய மூத்த மகளை அரசியல் மேடையில் ராமதாஸ் ஏற்றியுள்ளது பாமக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விரைவில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே உள்ள பிரச்சனைகள் சரியாக வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள்.