
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் வருகின்ற 31ஆம் தேதி செயல்படும் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் மாதத்தின் கடைசி நாள்களில் அனைத்து பொருள்களும் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படுவது கிடையாது.
ஆனால் இந்த மாதத்தின் கடைசி நாள் ரேஷன் கடைகள் இயங்கும். அதன் பிறகு அனைத்து விதமான பொருட்களும் அன்றைய தினம் நுகர்வோர்களுக்கு வழங்கப்படும். மேலும் இந்த வாய்ப்பினை பெற்றுக்கொண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான பொருட்களை ரேஷன் அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.