
மகாராஷ்டிராவை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கேதர் ஜாதவ் தற்போது 39 வயதாகும் நிலையில் இந்திய அணிக்காக கடந்த 2014 ஆம் ஆண்டு அறிமுகமானார். இவர் 73 ஒரு நாள் மற்றும் 9t20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அது மட்டுமல்லாமல் 95 ஐபிஎல் போட்டிகளிலும் ஆடியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்காக விளையாடியுள்ளார். இவர் 95 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 1208 ரன்கள் குவித்துள்ளார். இந்த நிலையில் இவர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக என்று அறிவித்துள்ள நிலையில் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க