
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி ஒரு இயக்கத்தில் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் சம்யுக்தா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் தனுஷ் பாலமுருகன் என்னும் ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், நடிகர்கள் சமுத்திரக்கனி, சாய்குமார், ஆடுகளம் நரேன், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்த படம் பிப்ரவரி 17-ஆம் தேதி ரிலீசான நிலையில் படத்தின் முதல் நாள் வாத்தி திரைப்படம் முதல் நாளில் 18 கோடியும் இரண்டாம் நாளில் மொத்தமாக 28 கோடியும் வசூல் சாதனை புரிந்ததாக தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில் வாத்தி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் குறித்து படக் குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அதன்படி வாத்தி திரைப்படம் ரிலீசான 4 நாட்களில் 51 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ளது. மேலும் வாத்தி படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால் இனி வருகிற நாட்களில் வசூலில் கோடிகளை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#Vaathi #SIR grosses 51 crores in just 3️⃣ days🔥
Best ever opening for our Star @dhanushkraja 🥳#Vaathi #SIR tops Monday's test results as expected 😎
'D' Rampage continues💥#VenkyAtluri @iamsamyuktha_ @gvprakash @dopyuvraj @NavinNooli @vamsi84 @SitharaEnts @7screenstudio pic.twitter.com/JxWtVZHujA
— Sithara Entertainments (@SitharaEnts) February 20, 2023