
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மாநில துணைத்தலைவர் கேபி ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி கடந்த 10 ஆண்டு காலமாக பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. பெரியாரை யாரும் இங்கு குறைத்து மதிப்பிடவில்லை. திமுகவினர் வாக்கு வங்கியாக பெரியாரை பயன்படுத்தி வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். பெரியாருடைய பேச்சுக்களையும் அவர் நடந்த விதத்தையும் தான் தற்போது அனைவரும் குறை சொல்லி வருகிறார்கள்.
அதை தான் சீமானும் பேசினாரே தவிர வேறு எதுவும் அவர் தவறாக பேசவில்லை. அவருடைய பேச்சில் எனக்கு மாற்றுக் கருத்து என்பது எதுவுமே இல்லை. பெரியார் தேர்தலை விரும்பவில்லை என்பதுதான் நிதர்சமான உண்மை. ஆனால் அவருடைய விருப்பத்திற்கு மாறாக திமுக தேர்தலில் போட்டியிட்ட போதே திமுகவுக்கும் பெரியாருக்கும் உள்ள உறவு முறிந்து விட்டது என கே பி ராமலிங்கம் பேசியுள்ளார்.