தமிழ், தெலுங்கு, மலையாள பட திரையுலகில் முன்னணி நாயகியாக உயர்ந்து உள்ளார் சாய்பல்லவி.  மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தில் அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானார்.  மாரி 2 படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தது மட்டுமின்றி பல படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். மேலும், வித்தியாசமான முழுநீள நகைச்சுவை கதாபாத்திரம் இருக்க வேண்டும் என்றும், அப்படிப்பட்ட வாய்ப்பு எந்த மொழியில் கிடைத்தாலும் உடனே நடிக்க சம்மதிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.