சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு பகுதியில் 26 வயதுடைய பெண் வசித்து வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு தனியார் கல்லூரியில் படித்தபோது இளம் பெண்ணுக்கு அதே கல்லூரியில் படித்த ஜூனியரான தினேஷ் என்பவர் முகநூல் மூலம் அறிமுகமானார். இருவரும் முகநூலிலேயே பேசி வந்தனர். அதன் பிறகு மேற்படிப்புக்காக வேறு கல்லூரிக்கு சென்ற பிறகு இருவரும் பேசிக் கொள்வதில்லை.

கடந்த நவம்பர் மாதம் தினேஷ் முகநூலில் இளம்பெண்ணுக்கு ஆபாச படத்தை அனுப்பியுள்ளார். மேலும் வீடியோ காலில் மூன்று முறை அழைத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தினேஷை கைது செய்தனர். மேலும் அவரது செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.