
போதைப் பொருள் விவகாரத்தில் அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என இயக்குநர் வெற்றிமாறன் கோரிக்கை விடுத்துள்ளார். தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், நான் ஒருகாலத்தில் அதிகளவு சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தேன்.
ஆனால் இப்போது அதில் இருந்து மீண்டு வந்து விட்டேன். பெற்றோர்கள் குழந்தைகளுடன் பேச வேண்டும். அவர்களை எந்தவித போதை பழக்கத்திற்கும் அடிமையாக விடக்கூடாது என்றும் தெரிவித்தார்.