
கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் பிரபல நடிகர் சுரேஷ் கோபி போட்டியிட்ட நிலையில் அவர் 4,12,338 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் முதல் முறையாக கேரளாவில் பாஜக தன்னுடைய வெற்றி கணக்கை தொடங்கியுள்ளது. இந்நிலையில் திருச்சூர் பகுதியில் நடிகர் சுரேஷ் கோபி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் பேசியதாவது, எனக்கு மந்திரி பதவி வகிப்பதில் எந்தவித விருப்பமும் கிடையாது. ஏனெனில் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கிறது. நான் கேரள மக்களுக்கான திட்டத்தை கொண்டு செல்லும்போது அதை மந்திரிகள் நிறைவேற்ற வேண்டும். அதுதான் என்னுடைய விருப்பம். மேலும் கேரளாவில் நான் வெற்றி பெற்றதால் என்னுடைய பணி இங்கு மட்டும் நின்று விடாது. நான் அண்டை மாநிலமான தமிழ்நாட்டுக்கும் எம்பியாக பணியாற்றுவேன் என்று கூறியுள்ளார்.