
90களில் பலருடைய கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் தமிழில் முதல் முதலாக புதிய கீதை என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு பல முன்னணி நடிகர்களோடு நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். இந்த நிலையில் மீனா கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில், தான் தவறவிட்ட படம் குறித்து பேசி இருக்கிறார். அதாவது தேவர் மகன் படத்தில் ரேவதி கேரக்டர் பண்ண வேண்டியது இருந்தது. இத்தனைக்கும் முதல் நாள் சூட்டிங் போய்விட்டு இரண்டு மூன்று மேக்கப் எல்லாம் போட்டு பார்த்தார்கள்.
அப்புறம் யாருக்கும் படத்தில் மேக்கப் இல்லைன்னு சொல்லிட்டாங்க. அடுத்த நாள் சூட்டிங் போயிட்டு ஒரு சீன் முடிச்சோம். அன்னைக்கு ராத்திரி அவங்க அதே சீன் எல்லாம் போட்டு பார்த்திருக்காங்க. ஆனால் கமல் சார் அவருடைய கெட்டப்பில் திருப்தியா இல்ல. அந்த மீசை எல்லாம் பெருசா அவர் நினைச்ச அளவுக்கு வரல. அதனால பத்து நாள் ஷூட்டிங் கேன்சல் பண்ணினாங்க .அந்த நேரத்துல டக்குனு பத்து நாள் என்ன பண்றதுன்னு தெரியல .ஆனா நாங்க கொஞ்சம் இப்படி எல்லாம் அட்ஜஸ்ட் செய்தோம். அப்புறம் திரும்பியும் அதே சீன் ரீசூட் பண்ணினோம். அதற்கு அடுத்த நாள் மறுபடியும் சூட்டிங் சொன்னாங்க. திருப்பியும் 10 நாள் வேஸ்ட்டா போச்சு என்று தெரிவித்துள்ளார்.