
நடிகை கனி குஸ்ருதி பிரியாணி திரைப்படத்திற்காக கேரள மாநில அரசின் சிறந்த நடிகைக்கான விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் முஸ்லிம்களுக்கு எதிரான கதைகளம் கொண்டது பிரியாணி படம் என்று விமர்சிக்கப்பட்ட இந்த படத்தில் விருப்பம் இல்லாமல் தான் நடிக்க ஒப்பு கொண்டதாக கனி குஸ்ருதி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், பிரியாணி படத்தில் நடிக்க எனக்கு விருப்பமில்லை.
ஆனால் என்னிடம் அப்போது பணம் இல்லை என்று இயக்குனரிடம் கூறியிருந்தேன். சுமார் 70 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டது என்று நினைக்கிறேன். அது எனக்கு பெரிய தொகை என்னுடைய கணக்கில் அப்போது 3000 ரூபாய் மட்டுமே இருந்தது. எனவே 70 ஆயிரம் கிடைத்தது எனக்கு நல்ல விஷயம் என்று நினைத்துக் கொண்டேன் என்று கூறியிருக்கிறார்.