தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியினை தொடங்கியுள்ளார். இவர் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், தற்போது புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் கட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்தவர்கள் பலர் உயிரிழந்த நிலையில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கு திமுக அரசுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்ததோடு இன்று கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்தார்.

இந்நிலையில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில் அவர் கள்ளக்குறிச்சிக்கு சென்றது அவருடைய முதல் கட்ட அரசியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இது  திமுக அரசுக்கு சற்று சவாலாகவே இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் மருத்துவமனையில் நடிகர் விஜய் இருந்த போது அவர் அங்கிருந்தவர்களை பார்த்தார். அவர் கண்களாலே பேசுவது போன்று அவருடைய பார்வை இருந்தது. மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.