ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் பெங்களூரு மோதும் போட்டிகள் வருகின்ற 18ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருக்கிறது. இந்த போட்டி தொடர்பாக தற்போது அம்பதி ராயுடு பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நாட்டிலுள்ள அனைவரும் மே 18ஆம் தேதி நடைபெறும் போட்டியை காண ஆர்வமாக காத்திருக்கிறார்கள். நானும் அதற்கு விதிவிலக்கு இல்லை.

புதிய கேப்டன் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிரணிக்கு சவால் கொடுக்க விரும்புவதை பார்க்க இருக்கிறேன். எம்.எஸ் தோனி தலைமையில் சென்னை அணி சிறப்பான முறையில் செயல்பட்ட நிலையில், இம்முறை நெருக்கடியான சூழலில் தோனியின் உதவி இல்லாமல் ருதுராஜ் எப்படி செயல்படுகிறார் என்பதை பார்க்க ஆர்வமாக காத்திருக்கிறேன். இதேபோன்று பெங்களூரு அணியும் வெற்றிக்கான வலுவாக இருப்பார்கள். மேலும் இதனால் இப்போட்டி மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.