கோயம்புத்தூர் மாவட்டத்தில் மணிப்பூர், அசாம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மாணவிகள் தங்கி படிக்கின்றனர். இந்த மாணவிகள் பாரதி பூங்கா சாலை, ராமலிங்கம் காலனி ஆகிய பகுதிகளில் இருக்கும் தங்கும் விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர்.

இந்த மாணவிகளுக்கு சிலர் பாலியல் ரீதியாக தொந்தரவு அளிப்பதாக புகார் வந்துள்ளது. பாதிக்கப்பட்ட மணிப்பூரைச் சேர்ந்த ஒரு மாணவி கூறும் போது, கடந்த ஐந்து மாதத்திற்கு முன்பு பல்கலைக்கழகத்திலிருந்து ராமலிங்கம் காலணியில் உள்ள எனது அறைக்கு நடந்து சென்றேன்.

அப்போது மரத்தின் பின்னால் நின்று கொண்டிருந்த நபர் என்னை பார்த்ததும் ஆடைகளை கழற்றி விட்டார் என குற்றம் சாட்டியுள்ளார். மற்றொரு மாணவி கூறும்போது, ஒரு ஹோட்டலுக்கு இரண்டு மாணவிகள் சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் ஒரு மாணவியை தகாத இடத்தில் தொட்டுள்ளார்.

அந்த மாணவி கூச்சலிட்டதும் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர் என கூறியுள்ளார். இப்போது வரை மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு தொடர்கிறது. இதனால் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.