அசாம் மாநிலம் சில்சார் பகுதியில் உள்ள அசாம் பல்கலைக்கழகத்தில் உள்ள பெண்கள் விடுதிக்கு அருகில் 17 அடி நீளமுள்ள 100 கிலோ எடையுள்ள பர்மா நாட்டு மலைப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

மலைப்பாம்பை மீட்பதற்கான நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய வனவிலங்கு ஆராய்ச்சியாளர் பிஷால் சோனார், “இந்த பாரிய ஊர்வனவின் நீளம் மற்றும் எடையைக் கருத்தில் கொள்வது மிகவும் கடினமாக இருந்தது” என்று கூறியுள்ளார். பிடிக்கப்பட்ட மலைப்பாம்பை போரயில் இருக்கும் வனவிலங்கு சரணாலயத்தில் வனத்துறையினர் விடுவித்துள்ளனர்.