இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு பிரதான பினிசராக இருந்த ரிங்கு சிங்கின் பெயர், டி20 உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் 15 வீரர்கள் பட்டியலில் இல்லாமல் போனது எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுகுறித்து ரிங்கு-வின் தந்தை கூறியபோது, எங்களுக்கு எப்படியும் ரிங்கு சிங் உலகக்கோப்பைக்கான 11 வீரர்கள் கொண்ட அணியில் இருப்பார் என்ற நம்பிக்கை இருந்தது.

அவர் அணியில் இருப்பார் என்பதை கொண்டாட இனிப்புகள், பட்டாசுகள் எல்லாம் வாங்கி தயாராக இருந்தோம். ரிங்கு சிங் மிகவும் மனம் உடைந்துவிட்டார் என அவரின் தந்தை கூறியுள்ளார்.