நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் ஆட்சி சிறப்பாக இருக்கிறதா? இல்லையா என்பதை மக்கள் தான் சொல்ல வேண்டும். ஆனால் ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடக்கிறது என்று கூறினால் கண்டிப்பாக அது கொடுமையான ஆட்சியாக தான் இருக்கும். என்னுடன் வந்து பார்த்தால் மக்கள் கவலையோடும் கண்ணீரோடும் இருப்பது தெரியவரும்.

யார் யாருடன் கூட்டணி வைத்தால் எங்களுக்கு. கூட்டணி வைப்பது என்பது தற்கொலைக்கு சமமான விஷயம். நாங்கள் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் 234 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவதுடன் 117 பெண்களுக்கும் 117 ஆண்களுக்கும் வாய்ப்பு கொடுப்போம். திமுக மற்றும் பாஜக கள்ள உறவில் இல்லை. அவர்கள் நேரடியாகவே கூட்டணியில் தான் இருக்கிறார்கள். மேலும் மற்ற  மாநிலங்களில் முதல்வர் வீடுகளில் ஐடி சோதனை நடைபெறும் நிலையில் இங்கு மட்டும் அது நடைபெறாது என்று கூறினார்.