உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு பூங்காவில் 6 வயதுடைய இரு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஒரு சிறுவன் தன்னுடைய அம்மாவிடம் சென்று நடந்த விஷயங்களை கூறினார். இதை கேட்டு அங்கு வந்த அந்த சிறுவனின் தாய் தன் மகனிடம் சண்டை போட்ட மற்றொரு சிறுவனின் கன்னத்தில் அறைந்துவிட்டார்.

அந்த சமயத்தில் அங்கு வந்த மற்றொரு சிறுவனின் தாய் அதனை தன் செல்போனில் வீடியோ பதிவு செய்ய அந்த பெண் அவரிடம் சண்டை போட்டார். அதோடு  அவருடைய செல்போனையும் தட்டி விட்டார். மேலும் சிறுவர்கள் சண்டையில் பெண் ஒருவர் இப்படி ஆக்ரோஷமாக செயல்பட்டு மற்றொரு சிறுவனை கன்னத்தில் அறைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ள நிலையில் பலரும் அந்த பெண்ணுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.