
ஆட்டிசம் போன்ற குறைபாடுடைய ஜார்ஜிய வீரர் வாக்தாங்கின் கதை, வெற்றியின் உண்மையான பொருள் என்ன என்பதை நமக்கு உணர்த்துகிறது. இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், ஜார்ஜிய வீரரான வாக்தாங் என்பவர் ஆர்ம் மல்யுத்தம் போட்டியில் கலந்து கொள்ளும்போது அவர் எதிரே நிற்பவர் இவரை தோற்கடிப்பது எளிது என்று ஏளனமாக சிரிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.
ஆனால் அவர் மன உறுதியுடன் போராடி தன்னை பார்த்து ஏளனமாக சிரித்தவரை எளிதாக வென்றுவிடுவார். இந்த தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாத அவர் போட்டி முடிந்ததும் வெற்றி பெற்ற வாக்தாங் கைகுலுக்க முயலும் போது அதை மறுத்து விட்டு செல்வார்.
இந்நிலையில் தனது சக போட்டியாளரை ஏளனமாக எண்ணியது மட்டுமல்லாமல், அவர் கைகுலுக்க வரும்போது அதை நிராகரித்துச் செல்வது மனிதத் தன்மையற்ற செயல் என அவரை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். தனது உடல் குறைபாட்டை கிண்டல் செய்த எதிரியை பொருட்படுத்தாமல், தன்னம்பிக்கையுடன் போராடி வெற்றி பெற்ற வாக்தாங்-ன் செயல், தசை பலம் மட்டுமல்லாமல், மன உறுதிதான் உண்மையான வெற்றியை தரும் என்பதை நிரூபிக்கிறது.