அவுஸ்திரேலியாவின் க்வீன்ஸ்லாந்தில் உள்ள மாப்பிள்டன் பகுதியில் அமைந்துள்ள ஒரு கட்டிட வேலைத்தளத்தில், 2.6 மீட்டர் நீளமுள்ள “Coastal Carpet Python” என்ற பாம்பு சிமெண்ட் கட்டங்களில் சிக்கியிருப்பதை கண்ட தொழிலாளர்கள், உடனடியாக பாம்பு மீட்பு குழுவை அழைத்தனர். அந்த இடத்தில் புதிதாக சிமெண்டு ஊற்றப்பட்ட நிலையில், பாம்பு பிளாஸ்டர் கற்களில் சிக்கியிருந்தது.

மீட்பு குழுவின் உறுப்பினர் ஹெதர் பாம்பை எடுப்பதற்கு பலமுறை முயற்சி செய்தார். ஆனால் பாம்பு  மீண்டும் உள்ளே செல்ல முயற்சித்ததாக கூறப்படுகிறது. இறுதியாக பாம்பின் தலையின் பின்னால் மெதுவாக பிடித்து பாதுகாப்பாக வெளியே எடுக்கப்பட்டது. இது மிகவும் நுணுக்கமான செயலாக இருந்தது.

 

பாம்பு மீட்டதற்கு பிறகு, அதன் மீது ஒட்டியிருந்த சிமெண்ட் துகள்களை அகற்றும் விதமாக முழுமையாக கழுவி சுத்தம் செய்தனர். பாம்பு எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, அதை மீண்டும் காட்டுப்பகுதியில் விட்டனர். மேலும்  இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, ஹெதர் குழுவின் விழிப்புணர்வும், செயல்திறனும் பாராட்டுப் பெற்றுள்ளது.